Skip to main content

Posts

Showing posts from June, 2012

“திராவிடர் , தமிழர் , டெசோ”

மூலைக்கு முப்பதென இருக்கும் பலகட்சிகளின் பேரில் இன்னமும் திராவிடம் பட்டொளி வீசிப்பறக்கும் ஒரு சூழலில் , திராவிட இயக்கத்திற்கும் எழுச்சிக்கும் எவ்வகையிலும் சம்பந்தப்படாத விஜயகாந்த் போன்றவர்களும் திராவிடக் கட்சி நடாத்துகின்ற சூழலில் நாம் இருக்கிறோம். தமிழ் , தமிழர் என்று அனுதினமும் அள்ளியள்ளித் தெளித்த வசனங்களாலும் , வீராவேச கருத்துக்களினாலும் திராவிடம் தட்டி எழுப்பிய உணர்வோடே இங்கு அனேகர் ‘தமிழுணர்வு’ பெற்றிருக்கிறோம். தமிழகத்தில் எழுந்த திராவிட உணர்வே , புலிகளுக்கு உந்து சக்தியாக இருந்தது என்று அவ்வமைப்பின் முன்னாள் தலைவரும் , எஞ்சியிருக்கும் ஒரே மூத்த உறுப்பினருமான ‘ கே.பி ‘ அவர்கள் சொன்னதே தமிழர்தம் 20ம் நூற்றாண்டு வரலாற்றில் தமிழர்களின் வாழ்வில் திராவிட இயக்கத்தின் பங்கை வெளிக்காட்டும். தமிழர் திராவிடராயினரா ? இல்லை திராவிடர்கள் தமிழர்களாயினரா என்று பார்க்கப்போனால் இரண்டுமே வடிகட்டின பொய்யே…..வரலாற்றில் ஆங்காங்கே அள்ளித் தெளித்த ஓரிரு கருத்துக்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டதே ‘திராவிடம்’ என்ற கருத்தாக்கம். அது முழுமையானதல்ல. திராவிடக்குட்பட்டோர் எனச்சொல்லப்படும் கன்னட , தெலுங்கு , மலை

செயற்கரிய செய்வர் பெரியர்….திரு.பொள்ளாச்சி நசன்.!

இந்தப்பதிவினை 2009 ல் எழுதினேன். படித்த நண்பர்கள் அனைவரும் , இது எமக்கு புதிய செய்தியே என்றார்கள்....நல்லசெய்தியினை நாலு பேருக்கு தெரியும்படி மீண்டும் உரக்கச்சொல்வதில் தவறில்லையே. அதனால் இந்த மீள்பதிவு..... நவம்பர் 2009 க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலவெளியில் 'தமிழம்' இணையம் தான் எத்துணை வளர்ந்திருக்கிறது? வாழ்த்துக்களும் ! , வணக்கங்களும்! த ற்செய லாக நேற்றிரவு வலையில் உலாவிக்கொண்டிருந்தேன்….மேற்கண்ட தலைப்பிலிருக்கும் குறள்மொழிக்கேற்ப , அரியதொன்றை செய்து கொண்டிருக்கும் திரு. பொள்ளாச்சி நசன் அவர்களைப் பற்றியும் , அவரது தமிழம் இணையம் பற்றியும் அரிய நேரிட்டது. உங்களில் சிற்றிதழ் தொடர்புபட்ட பலரும் அவரை அறிந்திருக்கக் கூடும்…….இன்னும் பலர் அவரைப் பற்றி அறிந்திருக்காமலும் இருக்கக் கூடும்…..என்னைப் போல..! அதனால் ஒரு சின்ன அறிமுகம்… ( சூரியனுக்கே டார்ச்சா என்று திரு.நசன் அவர்கள் கோவித்துக்கொள்ளக் கூடாது…!!) பொள்ளாச்சி நசன் என்று தன் பெயரை வழங்கும் மணிப்பிள்ளை நடேசன் தமிழம் என்னும் வலையிதழின் ஆசிரியர். இவர் சிதம்பரத்தில், செப்டம்பர் 15, 1952 அன்று பிறந்தார். பொள்ளாச்ச

உருவான டெசோ முதல் உருவாகாத ஈழம் வரை!

தோழர் ஆர். முத்துக்குமாரைப் பற்றி நாம் அறிமுகப்படுத்தவேண்டியதில்லை. அவரே நம்மை அறிமுகப்படுத்தும் நிலையில் இருக்கிறார். நாம் கொண்டுள்ள கருத்தையே அவரும் சுட்டுவதால் இக்கட்டுரை மீளப்பதிப்பிக்கிறோம்.! அவருடைய தளத்திற்குச் செல்ல இவ்விணைப்பை உபயோகிக்கவும். கருணாநிதி விரும்பினால் தமிழீழத்தைத் தமிழ்நாட்டுக்கு உள்ளேயே அமைத்துக்கொள்ளட்டும் என்று சீறியிருக்கிறார் இலங்கை அமைச்சர் கோத்தபய ராஜபட்சே. தமிழீழ ஆதரவாளர் அமைப்பைக் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான் என்று கண்டிக்கிறார் வைகோ. அன்று காங்கிரஸோடு உறவுகொள்ள டெசோவைக் கலைத்த கருணாநிதி, தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்வதற்காக டெசோவைத் தொடங்கியிருக்கிறார் என்று குற்றம்சாட்டுகிறார் பழ. நெடுமாறன். ஆக, தமிழீழ எதிர்ப்பாளர்கள் தொடங்கி தமிழீழ ஆதரவாளர்கள் வரை பலரும் கலைஞரைக் கண்டிக்கிறார்கள். விமரிசிக்கிறார்கள். எதிர்க்கிறார்கள். அத்தனைக்கும் ஒரே காரணம், டெசோ.   ஈழத்தமிழர்களின் பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு தமிழீழம் மட்டுமே. அதுதான் என்னுடைய நிறைவேறாத கனவு. அந்தத் தமிழீழத்தை அடைவதற்காகவே தமிழீழ ஆதரவாளர் அம