Skip to main content

Posts

Showing posts from December, 2012

சிரியா : உலகப்போரின் நுழைவாயில்.

சிரியா. சமீபத்தில் செய்திகளைப் பார்க்கும் , படிக்கும் பலருக்கும் இப்பெயர் ஒன்றும் புதிதாய் இருக்காது... பெரும்பாலும் , மேற்கத்திய நாடுகளின் செய்திகளையே கக்கும் நமது ஊடகங்களின் செய்திகளுக்குப்பின்னால் மிகப் பயங்கரமான உண்மைகள் புதைந்து கிடக்கின்றன... பாஷர் அல் ஆஷாத் என்ற கொடுங்கோலன் மக்களைக் கொல்கிறான் என்றே உச்சரித்துப்பழகிய பல தொலைக்காட்சி நிருபர்களையும் தாண்டி , அமெரிக்கா சிரியாவில் நுழைந்து மக்களைக் காக்குமா என்ற பொழுதுபோகா விவாதங்களையும் தாண்டி பல நிஜங்கள் மறைக்கப்படுகின்றன. லிபியா போன்றே சிரியாவும் கடந்து போகும் என்றே உலக நாடுகள் நினைத்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் , அப்படியல்ல , இந்த நிகழ்வுகள் பாரிய மாற்றங்களை பூமிப்பந்தில் ஏற்படுத்தப்போகின்றன  என பல உலக அறிஞர்கள் கருதுகிறார்கள். லிபிய புரட்சிக்கும் , இப்போது நடந்துகொண்டிருக்கும சிரிய புரட்சிக்குமான வேறுபாடு என்ன. ? முதல் வேறுபாடு , லிபியா போன்று நண்பர்களில்லாத நாடல்ல சிரியா. ரஷ்யாவின் கடற்படைத் தளத்தைக்கொண்டிருக்கும் நாடு. ரஷியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கிக்குவிக்கும் நாடு சிரியா. சிரியா என்பது ஈரான் மீதான அமெரிக்காவின